பக்கம்:வளைகோல் பந்தாட்டம்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

16

வரலாற்றுக் குறிப்புகள்

1942ம் ஆண்டு, ஏதென்சு நாட்டில் கண்டுபடிக்கப்பட்டதோர் இடிபாட்டுச் சுவர் ஒன்றில், பளிங்கால அறைகுறை முனைப்போவியம் {{SIC|கண்டுபிடிக்கப்பட்டிகிறது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. அது தெமிஸ்டாகிளிஸ் என்பவரால் (கி 549.514) கட்டி முடிக்கப்பெற்றது என்பதை கண்டுபிடித்திருக்கின்றனர்.

அந்த ஓவியத்தில், இன்றைய நடைமுறையில் உள்ள ஆட்டத்திற்கு மாறாக, ‘புல்லி’ என ஆட்டம்! தொடங்குதற்குரிய ஆட்டமுறையில், வளைந்தகோலில் பின்புறத்தைத்தரையில் வைக்காமல் அதை மாற்றி வளைந்த கோலின் நுனியைத்தரையில் ஊன்றி ‘புல்லி’ எடுப்பதுபோல் நிற்கவும், அவர்களுக்குப் பின்னால் மற்றவர்கள் நிற்பது போலவும் காணப்படுகின்றது

பிரான்சில் கி.மு.1486ம் ஆண்டில் இந்த விளையாட்டு விளையாடப் பெற்றது என்பதற்கு, ஏதென்சில் கண்டுபிடிக்கப் பெற்ற ஒரு அரைகுறை முனைப்போவிமும் உள்ளது என்பாரும் உளர்.

பிரான்சு நாட்டில் இந்த ஆட்டத்தை காக்கோ (Hoquel) என்று அழைத்தனர். அதற்கு ‘இடைய கைக்கோல்’ என்பது பொருளாகும். உயரமான மரத்திலிருந்து ஆடு மாடுகளுக்குத்தழை இலைகளை வளைத்து ஒடித்துத்தர பயன்படும் வளைந்த தடியைப்போ ஆடப்பயன்படும் இக்கோல் அமைந்திருந்ததினால், பெயரிட்டு அழைத்தனர் போலும்.

பிரஞ்சு உச்சரிப்பான காக்கே என்பதை மாற் ‘ஹாக்கி’ என்று ஆங்கிலேயர்கள் அழைத்தனர்.