பக்கம்:வளைகோல் பந்தாட்டம்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

19


பாரசீகத்தில் அரும்பி, கிரேக்கத்தில் மொட்டாகி, ரோமானியர்களிடையே போதாகி, ஐரோப்பாவில் மலர்ந்து, இங்கிலாந்திலே மலர்ந்து மணம் வீசியவளை கால் பந்தாட்டம், தன்னிடையே எத்தனை எத்தனை மாற்றங்களைப் பெற்று விளங்கியிருக்கிறது என்பதை அறியும் பொழுது, நம்மால் வியக்காமல் இருக்க முடியல்லை.

'பந்தை அடிப்பது ஓடுவது'(Hit and run) என்பதே படத்தின் தலையாய நோக்கமாக அன்று இருந்தது. 'பந்தை மட்டும் அடி, ஆளை அடிக்காதே' என்ற பழமொழி எழும் அளவுக்கு முரட்டுத்தனமும் மூர்க்கத்தனமான வேகமும் ஆட்டத்தில் நிறைந்து இருந்தது.

ஆட்டத்தில் இருந்த பதினொரு பேரில் எட்டு பேர் முன்னாட்டக்காரர்கள். இருவர் இடைக்காப்பாளர். ஒருவர் இலக்குக் காவலர். இவ்வாறு இருந்த ஆட்ட அமைப்பு, எட்டு பேராக இருந்த முன்னாட்டக்காரர்களின் எண்ணிக்கையில் ஏழாகி, ஆறாகி, இறுதியில் ஐந்தாகி, அதுவே இறுதியாகவும் அமைந்து விட்டது.

1886ஆம் ஆண்டுதான் 'D' வடிவமுள்ள 'அடிக்கும் வட்டம்' (Striking circle) அமைக்கப் பெற்றது.

1889ஆம் ஆண்டுதான் ஆடுகளத்தின் நிலையான எல்லையின் அளவு நிர்ணயிக்கப் பெற்றது. நீளம் 100 கெஜம், அகலம் 60 கெஜம் என்று ஆடுகளங்கள் நிர்மாணிக்கப் பெற்றன.

1906ஆம் ஆண்டு, தண்டமுனை (Penalty Corner) என்று ஓர் புதுவிதி புகுத்தப்பெற்றது..