பக்கம்:வளைகோல் பந்தாட்டம்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

35


    கோலைப் பயன்படுத்தும் பொழுது, வேறு எந்த 
முறையிலாவது பந்தைப் பொறுக்கி எடுப்பதோ,
காலால் உதைப்பதோ, எறிவதோ, எத்துவதோ,  
அல்லது தள்ளுவதோ கூடாது. அதே நேரத்தில் 
நிர்க்கும் ஆட்டக்காரர் கோலுடன் வேகமாகஅடித்
தலோ, அல்லது தடுத்தலோ கூடாது.
    எதிராளியை எந்த நிலையிலும் இடிப்பதோ, இடறி 
விடுவதோ, இடந்தராது உதைப்பதோ, முரண்பாடு 
டித்தவாறு முன்னுக்குத் தள்ளுவதோ அல்லது xன்னேற 
விடாமல் பிடித்து நிறுத்துவதோ தவருகும்.
    பந்துக்கும் எதிராளிக்கும் இடையில் ஒடுவதும். 
அவர்களின் வழியை மறிப்பதும், உடலால் குறுக் 
கிடுவதும்; கோலால் தடை செய்வதும், இடப்புறமாக 
ஓடி தவருன முறையில் தாக்கி ஆடமுயல்வதும் 
தவருகும்.
    மேலே கூறிய தவறுகளுக்குத் தண்டனையாக 
தனி அடி' எடுக்கும் உரிமையை நடுவர் எதிர்க் 
குழுவினருக்கு வழங்குவர். ஆகவே, கவனமாக, 
தவறிழைக்காமல் ஆடும், கருத்தான ஆட்டத்தை ஆட 
அனைவரும் முயன்ருல்தான், ஆட்டம் சிறப்புற 
அமையும்.
    தனி அடி எடுப்பவர்கள் எவ்வாறு ஆட வேண்டும் 
என்ற முறையினையும் முக்கியமாக அறிந்துகொள்ள 
வேண்டும். 
    தனி அடியானது, தவறு செய்த குழுவிற்கு 
எதிராகத் தருகின்ற தண்டனையாகும். ஆகவே, தவறி    குறிப்பு: இலக்குக் காவலன் அடிக்கும் வட்டத்திற்கு வெளியே ஓடிவந்து பந்தைக் காலால் உதைத்தாலும் தவருகும்.