பக்கம்:வளைகோல் பந்தாட்டம்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

45


   பந்து அடிக்கப்படும்வரை தாக்கும் குழு ஆட்டக்கார்கள், தடுக்கும் குழுவினர் அவரவர் இடங்களிலே தான் நிற்கவேண்டும்.
   பந்து அடிக்கப்படும்முன், தடுக்கும் குழுவிலிருந்து: ஒருவர் கடைக்கோட்டைக் கடந்து வந்து விட்டால், அல்லது நடுக்கோட்டை கடந்து வந்துவிட்டால், மீண்டும் முனை அடியை எடுக்க நடுவர் ஆணையிடுவார். முன்போலவே, எல்லோரும் அவரவர் இடங்களில் போய் நிற்க வேண்டும்.
   தடுக்கும் குழு ஆட்டக்காரர்கள் வேண்டுமென்றே முன்போல் வந்தவண்ணம் இருந்தால், அதற்குத் தண்டனையாக, நடுவா் ‘தண்டமுனை’  (Penalty-corner) என்ற தண்டனையை விதித்து ஆடச்செய்வார்.
   தண்டமுனை எடுக்கும் பொழுதும், மேற்கூறிய விதியைத் தடுக்கும் குழு ஆட்டக்காரர்கள் மீறினால், அவர்களுக்கு எதிராக ‘ஒறுநிலை அடி' (Penalty stroke)  என்ற தண்டனையை விதித்து ஆடச் செய்வார்.
   (தண்டமுனை எடுப்பதின் விளக்கத்தை 7ஆம் பகுதியில் காண்க.)
   முனை அடி எடுக்கும்பொழுது தாக்கும் குழுஆட்டக்காரர்கள் அடிக்கும் வட்டத்திற்குள்ளே வந்து விதியை மீறினால், அவர்களுக்கும் தண்டனை உண்டு. அந்தத் தண்டைனயாவது, முதல்முறை மீறினால், முன்போலவே தாரண்டும் முனை அடி அடிக்கின்ற வாய்ப்பு தாக்கும் குழுவினிருக்குக் கிடைக்கும். 

முனை அடியினால், பந்தை நேராகவே இலக்கினுள் அடித்து வெற்றி எண்ணைப் பெறமுடியாது. தாக்கும்.