பக்கம்:வளைகோல் பந்தாட்டம்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

52

   அந்த இலக்குக் காவலன், தான் இலக்கைக் காக்கும் பணியினை ஆற்ற முடியாதபொழுது, அல்லது ஆட்டத்தைவிட்டு வெளியேற்றப்பட்ட பொழுது, தடுக்கும் குழுவின் தலைவன், அப்பணியாற்ற வேறு ஒருவா் நியமிப்பார். அவருக்கு, இலக்குக் காவலனுக்கு எல்லா உரிமைகளும் உண்டு. 
   இனி, ஒறு நிலை அடி அடிக்கப்படும்பொழுது, அடி இலக்குக் காவலன் எவ்வாறு தடுத்து ஆடவேண்டும் என்பதையும் காண்போம்.
    இலக்குக் காவலன் அல்லது அவருக்குப் பதிலாக மாற்றாளாக ஆடுவோர், ஒறு நிலை அடி எடுக்கும் நேரத்தில், இலக்குக் கம்பங்களுக்கிடையேயுள்ள கடைக்கோட்டின் மேலேயே நிற்க வேண்டும். ‘அடி’ எடுப்பவா் அடிக்கத் தயாரானதும், அடி எடுக்கப்படும் வரை தனது கால்களை நகர்த்தவோ, கடைக்கோட்டைவிட்டு முன் வரவோ கூடாது.
    தாக்கி வருகின்ற பந்தை இலக்குக் காவலன், தனது உடலாலோ அல்லது கையாலோ தடுக்கலாம். அது குற்றமல்ல. ஆனால், அவரது தோள் உயரத்திற்கு மேலே வருகின்ற பந்தைக் கோலால் தடுக்க முயன்று. தோளுக்கு மேலே உயர்த்திப் பந்தைத் தடுக்கக் கூடாது.
   அவ்வாறு மீறனாலும், அல்லது பந்து இலக்கினுள் நுழைந்தாலும் அது வெற்றி எண்ணாகவே கருதப்படும்.

பந்தை காவலன் திறமையுடன் தடுத்து விட்டால் அந்தப் பந்தானது அடிக்கும் வட்டத்திற்கு உள்ளேயோ