பக்கம்:வளைகோல் பந்தாட்டம்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

54

யிலோ, உயரத்திலோ பந்து போய்விடாமலும், இலக்கு காவலர் எளிதாகத் தடுத்துவிடாமலும், நிதானமாக இலக்கின் மூலை பார்த்து (Angle) அடிக்க வேண்டும் தடுப்பவரும் தைரியமாக நின்று விளையாட வேண்டும்.

9. பந்தை உள் அடித்தல் (Push-in)

எந்தக் குழு, பக்கக் கோட்டிற்கு வெளியே பந்தை அனுப்பிவிடுகிறதோ, அக்குழுவினரின் எதிர்க்குழுவிற்கு, பந்தை உள் அடித்து அனுப்பி ஆடும் வாய்ப்பை கிடைக்கிறது.

பக்கக் கோட்டிற்கு வெளியே பந்து போன இடத்தில், கோட்டின்மேல் பந்தை வைத்து, தாமதம் செய்யாமல், தரையோடு தரையாகத் தள்ளி அனுப்பிவிட வேண்டும்.

அவ்வாறு ஆடும்பொழுது, பந்துக்கு 5 கெஜத்திற்கு அப்பால் அனைவரும் நின்று கொண்டிருக்க வேண்டும்.