பக்கம்:வளைகோல் பந்தாட்டம்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தகுதியும் திறமையும்


    விளையாட்டில் கலந்து கொண்டு, விதிமுறைகளுக்கு உட்பட்டு விளையாடுவதுடன், ஆட்ட நுணுக்கங்கள் அனைத்தையும் அனுசரித்து ஆடி வெற்றிக்குரிய விழிப்புடன் முன்னேறுவதும், எதிராளிகளைத் தடுத்தாடுவதும் போன்ற பணிகளில் ஈடுபடும் ஆட்டக்காரர்கள் அனைவருக்கும், தாங்கள் எங்கிருந்து ஆட வேண்டும் என்று அவரவர் திறமைக்கேற்ப ஆடும் இடங்களைத் (Position) தேர்ந்தெடுத்துத் தெளிவு செய்துகொள்ள வேண்டும்.
    எந்தப் பணிக்கு யார் யார் ஏற்றவர்களாக இருப்பார்கள்? அந்தப் பணிக்குரிய கடமை என்ன? ஆற்றல் என்ன? எப்படி எப்படியெல்லாம் இருந்து ஆடவேண்டும்? என்ற வழிமுறைகளை வகையாகப் பிறழாமல் கற்றுக் கொண்டால், ஆடுவோருக்கும் ‘சிறந்த ஆட்டம் ஆடினோம்’ என்ற ஒரு பூரண திருப்தி ஏற்படும். பார்ப்பவர்களுக்கும் மகிழ்வூட்டும் முறையில் அமைந்த ஒரு நல்ல விளையாட்டுப் போட்டியைக் கண்டு களித்தோம் என்ற ஆறுதல் கிடைக்கும்.
    ஆகவே, விளையாட்டில் ஈடுபடுவதற்கு முன்னர், தனது ஆடும் இடம் என்ன. தன் தகுதி என்ன