பக்கம்:வள்ளலாரும் அருட்பாவும்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12


இறவா வரம் அளித்து என்னை மேல் ஏற்றினாய்" 'சாகா கிலை இது தந்தனம் உனக்கே’ என்றாய், 'எல்லாம் வல்ல சித்து எனக்கு அளித்தாய்’ "அற்புதம் இயற்று! அதிசயம் இயற்று' என்றாய் எனவும், அவரே இறைவனிடம் கூறி மகிழ்ந்தது. இவை அனைத்தும் நம்மை வியப்படையச் செய்வன. 13. சீர்த்திருத்தக்காரர் 1. ஏழை, பணக்காரர், மேல்சாதி, கீழ்சாதி முறை களைக் கண்டித்தவர். 2. சமய வேற்றுமைகளைச் சாடியவர். 3. புராண இதிகாசங்களை வெறுத்தவர். 4. கோவில் கட்டியவன் கோவிலுக்குப் போகாத நிலையையும், குளம் வெட்டியவன் தண்ணிர் எடுக்க முடியாத நிலையையும் தாக்கி, ஒரு பெரும் புரட்சியைச் செய்தவர். 5. மாயூரம் முனிசிப் வேதநாயகம்பிள்ளை பாடிய நீதி நூலுக்குச் சாற்றுக்கவியும் வழங்கி மகிழ்ந்தவர். - 14. அவரது வரலாற்றை அறியத் துணைபுரிவன : l. இருவருட்பாவில் காணப்பெறும் அகச்சான்றுகள். 2. தொழுவூர் வேலாயுத முதலியார் பாடிய "திரு அருட்பா' வரலாறு. • .