பக்கம்:வள்ளலாரும் அருட்பாவும்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளலார் 1. வள்ளலார் யார்? உலகில் உள்ள மதங்கள் நூற்றுக்கு மேற்பட்டவை என்றும், அவற்றுள் மிகப் பெரிய மதங்கள் ஒன்பது என்றும் சமயவாதிகள் கூறுகின்றனர். அவை இந்து மதம், புத்த மதம், சமண மதம், கிறிஸ்து மதம், இஸ்லாம் மதம், பார்சி மதம், சைவம், வைணவம், சன்மார்க்கம் என்பள. இவை அனைத்தும் நாம் வாழ்கின்ற இதே ஆசியாக் கண்டத் தில் தோன்றியவை. இதனால் நல்லறிஞர்கள் ஆசியாக் கண்டத்தினைக் குறிப்பிடும் போதெல்லாம் "ஞானம் பிறந்த கண்டம்”. ஞானம் பிறந்த கண்டம்” என்று கூறுவதுண்டு. . அதிலும் ஆறு மதங்கள் நம் இந்தியாவிலேயே பிறந்தவை. அதிலும் மூன்று மதங்கள் தமிழகத்திலேயே தோன்றியவை. அவை, சைவம், வைணவம், சன்மார்க்கம் என்பன. இவற்றில் சன்மார்க்க சமயத்தைத் தோற்றியவர் நம் வள்ளலார். - பொருளை வாரி வழங்கியவர்கள், 'பொருள் வள்ளல் கள்'; அருளை வாரி வழங்கியவர்கள் "அருள் வள்ளல் கள்'. இத்தகைய அருள் வள்ளல்கள் பலர், அவர்களில் வள்ளலார் என்ற பெயரையே பெற்றுத் திகழ்பவர் நம் வள்ளலார்.