பக்கம்:வள்ளலார் யார்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44

வள்ளலார் யார்?


பெற்ற கலையறிவெல்லாம் அம் மானனைய மாதர் கல்லாள் கூந்தலில் முடித்த கோதைக் கண்ணியின்: சிக்குண்டு கிலேயழிந்து விட்டது என்று நெஞ்சுருகின் உாங்கனுக்குச் செஞ்சொல் பகர்ந்தான்.

இங்கனம் அகத்துறையிலும் புறத்துறையிலும் கண்ணியிற் பட்ட கலை என்னும் ஒரு தொடர் சிறந்த கருத்துக்களைப் புலப்படுத்தி கின்றது. அதே தொடர் சமயத்துறைக்குப் பயன்படும் விதத்தைப் பார்த்தல் வேண்டும்.

இந்த உலகம் இருள் சூழ்ந்த ஒரு பெருங்காடு. அதில் கல்வினை திவினைகளாகிய புதர்கள் அடர்ந்துள் ளன. இவற்றிற்கு இடையே பிறவியாகிய பெரு கண்ணி விரிக்கப்பட்டுள்ளது. அந்தக் கண்ணியில் விழுந்த ஆன்மாக்கள் எல்லாம் தப்ப முடியாது தவிக் கின்றன. இறைவனுகிய அருளாளன் தனது அரு ளென்னும் கூர்ங்கத்தியால் அந்தப் பிறவிக் கண்ணியை அறுத்துத் திருவடி இன்பத்தை நல்க வேண்டும்.

ஆன்ம விடுதலை அளித்தருளும் அருளாளன் தோன்றுவது எளிதன்று. காதலாகிக் கசிந்து கண்ணிர் மல்கி, அவன் புகழ் பாடி அவனது அருள் வரவை எதிர்நோக்கி நிற்றல் வேண்டும். ருெக்குருெக்கு நினை பவர் நெஞ்சுள்ளே புக்கு நிற்கும் பொன்னர் சடைப் புண்ணியனுகிய இன்னருளாளன் ஆன்மாவின் வினே களே வேரறுக்க வேண்டும். அப்போதுதான் பிறவிக் கண்ணியில் விழுந்த ஆன்மாவாகிய கலைமான் விடுதலை பெற்று வீடுபேறு எய்த முடியும்.

இந்த உண்மையை ஆன்ம நேய ஒருமைப்பாட்டு உரிமைச் சகோதரர்களாகிய சன்மார்க்கத்தவர்க்கு அரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வள்ளலார்_யார்.pdf/46&oldid=991844" இலிருந்து மீள்விக்கப்பட்டது