பக்கம்:வள்ளலார் யார்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70

வள்ளலார் யார்?


ஒளவையார் உண்ட அமுத நெல்லிக்கனியைப் போன்றே, அப்பொதிய மலையில் காவற்கனியொன்றும் விளங்கியது. அதுவும் பன்னிரண்டு ஆண்டுகட்கு ஒரு முறை ஒரு கனியே தோன்றுமாம். அதனை உண்டவர் பன்னிரண்டு ஆண்டுகள் பசிப்பிணியால் வருந்தார். அது பனம்பழம் போன்று பருமனாக இருக்குமாம். அதனைப்பற்றிய வரலாறு ஒன்று, மணிமேகலை என் னும் பழந்தமிழ்க் காவியத்திற் காணப்பெறுகின்றது.

பொதிய மலையில் பன்னிரண்டு ஆண்டுகள் அருங் தவம் புரிந்த விருச்சிகன் என்னும் முனிவன் அவ்வமுத காவற்கனியைப் பறித்துத் தேக்கிலேயில் பொதிந்து காட்டாற்று மணற் பரப்பில் வைத்து நீராடச் சென்மூன். அவ்வழியே தன்கணவனுடன் களியாட்டுப் புரிந்து கைகோத்து கடந்து வந்த காயசண்டிகை யென் லும் இளம்பெண், அந்த காவற்கனியைக் காலால் மிதித்துச் சிதைத்தாள். இதனை உணர்ந்த விருச்சிகன் அப்பெண்ணேப் பன்னிரண்டு ஆண்டுகள் தன்னைப் போல் பசிப்பிணியால் வருந்துக என்று சபித்தான்.

கணவன் தந்த இரு மாங்கனிகளில் ஒன்றை அடி யவர்க்குப் படைத்து விட்டார் காரைக்காலம்மையார்.

முென்றையும் கொண்டு வருக என்றபோது, அம்மை

யார் உற்ற இடத்து உதவும் கற்றைச்சடைப் பெரு மானக் கனிந்துருகி நினைந்தார். அப்பெருமான் திரு வருளால் கைம்மருங்கு வந்திருந்தது அதிமதுரக் கனி யொன்று என்று சேக்கிழார் இயம்புவார். தித்திக்கும் திருவருள் திங்கனியைப் புனித்வதியாரின் கணவன் புசிக்கும் பேறு பெற்ருன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வள்ளலார்_யார்.pdf/72&oldid=991857" இலிருந்து மீள்விக்கப்பட்டது