47
சில்ஹெட், என்ற இடத்தில் உள்ள பிரசித்தி பெற்ற காளி கோயிலின் விக்ரஹத்தைப் பைத்தியம் பிடித்த இந்து ஒருவன், தூள்தூளாக நொறுக்கிவிட்டதாகக் கூறப்படுகிறது. காளியைப் பார்த்து அவன் ஏதோ சில கேள்விகள் கேட்டான்; பதில் கிடைக்காது போகவே அவன் கோபங்கொண்டு விக்ரஹத்தை உடைத்துவிட்டானாம். மேற்படி கோயில் இந்த ஜில்லாவில் ரொம்பப் புராதனமானதாகும்.
5-7-’43 சுதேசமித்திரன்
ஸ்ரீ எம். சி. டி. சிதம்பரம் செட்டியார் திருமலை கோயிலுக்குச் சுமார் ரூ.15,000 மதிப்பில், தங்கக்குடை சமர்ப்பிக்க நிச்சயித்திருக்கிறார். நேற்று நடந்த தேவஸ்தானக் கூட்டத்தில் அதை வந்தனத்துடன் ஸ்வீகரிக்க ஒப்புக்கொண்டார்கள்.
இக்கொடையை முக்கிய தினங்களிலும், வெள்ளித் தேர்மேலும், உபயோகிப்பார்கள்.
4-7-’43 சுதேசமித்திரன்.
இன்று காலை கூடிய ஒரிசா சட்டசபையில் கேள்விகளுக்குப் பதில் அளிக்கும்பொழுது, மாகாணத்தில் பட்டினியால் பலர் மரணமடைந்ததாக அறிவிக்கப்பட்டது. நல்உணவின்றி எழுபதுபேர் மாண்டதாக, பாலசோர் மாஜிஸ்ட்ரேட்டிடமிருந்து அறிக்கை கிடைத்ததாகவும், அவ்விதம் இறந்தவர்கள், இப்பொழுதைய வாழ்க்கை சம்பந்தமான கெடுதலான நிலைமையையும் உணவுக் குறைவையும் தாங்கமுடியாமல் மரணமடைந்ததாகவும், பட்டினியினால் மரணமடைந்தவர்