உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வள்ளிநாயகியின் கோபம்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

68 மனப்பிராந்தி என்று தெளிவுபெற்று, உலகுக்கு அதை உணர்த்த, உக்கிரமாகாளியை உருக்குலைய வைத்தேன். இவர் கள், எனக்குப் பைத்தியம் என்று இங்கே தள்ளிவிட்டார்கள். அலங்கோலமான உருவங்கள். கோணங்கிச் சேட்டைகள், கோசமான சத்தங்கள் இங்கே காண்கிறேன். பித்தர் விடுதி யின் அவலக்ஷ்ணம் இதுவாம்! அங்கே வெளியே என்ன வாழுகிறது! ஏ,அப்பா,அங்கே சக்தியின் பேரால் பூமி யிலே புரளுவோரும், வேல்குத்திக் கூவுவோரும், பட்டைப் பூச்சுப் போடுவோரும், கொட்டு முழக்குடன் கூத்தாடு வோரும் வாழுகிறார்கள்! அந்தப் பைத்தியக்காரச் செயலைப் பக்தி என்று கூறி மூடிவைக்கிறார்கள். அங்கு இருப்பதைவிட, இங்கு இருப்பதிலே, கஷ்டமோ, இழிவோ இருப்பதாக எனக் குத் தோன்றவில்லை. அங்கே பைத்தியக்காரச் செய்கைக்குப் பக்கபலம் இருக்கிறது. இங்கு அது அதிகரிக்காதபடி பாது காப்பு இருக்கிறது. அதைவிட, இதுமேல். வெளியே வேட தாரிகள் கூட்டத்திலே உலவுவதைவிட, இந்தப் பித்தர் விடுதியே மேல்! இங்கே பித்தம் தெளிய மருந்திருக்குது. அங்கே பித்தம் வளர மருள் இருக்குது. இதைவிட அது மோசம். (பித்தர் விடுதி வார்டன் வருகிறான் ) டே! மாரி பைத்தியம்! கூவாதே தூங்கு. மணி பனி ரண்டாகுது தூங்கு. சில்காட்டன் : அட பைத்யக்காரா! எனக்காடா பைத்யம்? இந்த நாடகத்தைப் படித்தானதும் நான் வீரா, “விக்ர கத்தை உடைத்த பைத்தியக்காரன் விஷயமாக விசித்திரமான நாடகம் தீட்டினாயே," என்று சிரித்துக்கொண்டு கேட்டேன்.