உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வள்ளிநாயகியின் கோபம்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

84

இதென்ன ஆச்சரியம் என்று கூறியவண்ணம், உட்கார்ந்தார், புலித்தோல் ஆசனத்தின் மீது-சோகம் கொண்டு, கரத்தைச் சிரத்தருகே கொண்டு சென்றார்.-“போதும், உபசாரம்!” என்று கூறியபடி, கங்காதேவி, அவர் கரத்தைத் தள்ளிவிடவே, ஐயன், “ஓஹோ! மாதரசி! மறந்தே போனேன்! கங்கா தேவி! கதறியது நீயா? காரணம் என்ன? எந்தக் கயவனால், என்ன கேடு நேரிட்டது, கூறு? மனக்கஷ்டமடைய உனக்கு என்ன காரணம் கிடைத்தது! உமையவள், என் உடலிற் பாதி மட்டுமே பெற முடிந்தது-நீயோ, என் உச்சியிலே உறைவிடம் பெற்றாய்! உன் நிலை இவ்வளவு உன்னதமாக இருக்கும்போது, நீ உள்ளம் நொந்து கிடக்கக் காரணம் என்ன? உலகோர், உன் மகிமையைப் போற்றிப் புகழக் கேட்டுப் புளகாங்கிதமடைவது முறையாயிருக்க, புனிதவதி! நீ புலம்பக் காரணம் என்ன?” என்று பரமசிவனார் பரிவுடன் கேட்கலானார்.

கங்கா தேவியார், கைலைவாசனின் ஜடாபரத்தை விட்டுக் கீழே இறங்கிவந்து, ஐயனின் அருகே அமர்ந்து கொண்டு, கண்களைத் துடைத்தபடியே பேசலானார் - கோபமும் சோகமும் கலந்த குரலில்.

“என்னை இந்தக்கதிக்கு ஆளாக விட்டுவிட்டு நீர் ஆனந்தத் தாண்டவமாடுகிறீரோ?ஆண்களின் சுபாவமே இப்படித்தானே? அழுத கண்களுடன் ஆரணங்குகள் இருந்தபோதிலும் ஆடல் பாடலில், விருந்து வைபவத்தில் காலங்கழித்து வரும் கல்மனம் படைத்தவர்கள் தானே ஆண்கள்”

“கங்கா தேவி! மற்ற ஆடவர்களைப் போலவே என்னையும் எண்ணிக்கொண்டாயா? பெண் குலத்தைப் பழிக்கும் பேயன் அல்லவே நான். பெண்பாவாய்! ஏன் வீணாக மனதைக் குழப்பிக் கொள்கிறாய்? உன் மனக் கஷ்டத்திற்கு