உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வள்ளிநாயகியின் கோபம்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

86

உண்மையல்லவா அது. உன் பெருமையை அறியாதார் யார் உளர்? உன் புனிதத் தன்மையைப் புகழாதார் யார்? பாசுரங்கள் பல உள்ளன, உன் பெருமையைப் பாராட்ட.”

“பழங்கதைகள் கூடத்தான் உள்ளன - பகீரதன் என்னைக் கொண்டுவரச் செய்த முயற்சி, என்னால் ஏற்பட்ட அற்புதம் ஆகியவைகளைப் பற்றி......”

“ஆமாம் - சகல பாபங்களையும் போக்கிக்கொள்ள, கங்கையில் ஒரு முறை தலை முழுகினால் போதும். பாபம் கரைந்து போகும் - புண்யம் வந்து சேரும் — சர்வரோகமும் தீர்ந்து போகும் — சௌபாக்யம் வந்து சேரும், என்று உன் பெருமையைப் பாரோர் புகழத்தானே செய்கிறார்கள். பரத கண்டத்து மக்கள், எந்தக் கோடியில் உள்ளவர்களாயினும், உன்னைத் தரிசிக்க வருகிறார்களே! கங்கா தீர்த்தம், மகா மகத்துவம் வாய்ந்தது என்று கூறுவார்களே! இதிலே, என்ன சந்தேகம்?”

“இவ்வளவு மகிமையும், பொய்—கங்கா தீர்த்தம், புனிதமானதல்ல, கங்கையிலே தலை மூழ்கினால், பாபம் ஒழிந்துபோகும், என்று கூறுவது தவறு, என்று கூறுகிறார்கள். என் மகிமையைப்பற்றி எவ்வளவோ சுவடிகள் இருந்து என்ன பயன்? கங்கா தீர்த்தத்துக்கு “சகல ரோகங்களையும்” தீர்த்துவிடும் சக்திகூட இல்லை, என்று கூறிவிட்டார்கள்.”

“ஆஹா! இவ்வளவு துணிவுடன் பேசினரா......”

“ஏசினர், என்றுதானே பொருள்!”

“ஆமாம் - உன் மகிமையை மறுப்பவர், மாபாவிகளே! என்ன கூறினர்?”

“அவர்கள், ஆராய்ச்சி செய்து பார்த்தார்களாம் - பாமார் நம்புவதுபோல, கங்கா தீர்த்தத்திலே, ஒருவித-