பக்கம்:வள்ளுவம் -ஆராய்ச்சி.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இன்மை நிலை | 13

இலமென்று வெஃகுதல் செய்யார் புலம்வென்ற புன்மையில் காட்சி யவர் (174)

இலனென்று தீயவை செய்யற்க செய்யின் இலனாகும் மற்றும் பெயர்த்து (2 g z}

ஈன்றாள் பசிகாண்பா னாயினும் செய்யற்க சான்றோர் பழிக்கும் வினை (656)

என அறிவும் அச்சமும் பழியும் காட்டித் தீவழிச் செலவை ஒழுக்க விலக்கைத் - தடுக்க எண்ணினார். வள்ளுவர் உரை மடுத்து அறிவறிந்து பழிக்கு அஞ்சி ஒரு சிறுகணம் பசி பொறுத்துக் கொள்ளலாம். அதற்கு மேல் அவரை நேரடியாகப் பசியைத் தணிக்க மாட்டுமா? உயிர்த்துடிப்பை நிறுத்த ஒல்லுமா? சோறு பசி யாற்றுமன்றி எனைப் பெரியோர் சொல்லும் பசி மாற்றாது காண்.

கொள்கைகளோடு அவற்றைச் செயற்படுத்தற்கு உரிய வழிகளும் உடன்காட்டுவது திருக்குறள் முறை யாதலின், வறுமையிற் செம்மை வேண்டும் ஆசிரியர் - நல்குரவின் இன்னாமையை யாரினும் நன்கு உணர்ந்து ஓரதிகாரம் வகுத்த ஆசிரியர் - வெற்றென அறத்தைத் தொடுத்துச் சொல்லார். “ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும் (131) என்றாரேனும், அரிய பெரிய நல்லுயிர் உண்டி இன்மையானே மாய்வதை விரும்பார். பெறற்கு அரிய மானிட உடம்பு பெற்றான் நெடிது உய்க்குமாறு மருந்து வரையும் ஆசிரியர், அவ்வுடம்பு பிடிசோறு இல்லாக் குறையான் அழியக் கருதார். வாழ்வுக்கு முதலெனத் தகும் இவ்வுயிர் மெய், இளிவரின் வாழாத மான முடையார் (970), நானால் உயிரைத் துறப்பர் (1017), தன்னுயிர் நீப்பினும் செய்யற்க (327), புரந்தார்கண் நீர்மல்கச் சாகிற்பின் (9780), இழைத்தது இகவாமைச் சாவாரை (779), ‘ஒழுக்கம் உயிரினும் ஒம்பப்படும் (131) என மானத்துக்கும், ! நாணத்துக்கும், அருளுக்கும், செய்ந்நன்றிக்கும், கொள்கைக்கும், ஒழுக்கத்துக்கும், இன்ன பிற - குணவுயர்வுக்கும் துறக்கத்தகுவ தன்றி, ஐயகோ, பசி வாய்ப்பட்டுத் தொலைக்கத் தகுவதோ? ஆதலால் உலகியல்பு பலவற்றையும் சூழ்ந்து, வாழ்க்கை ஆசான் வள்ளுவர் இரக்க (1051) என ஒரு வழி காட்டினர். இதனை இகழ்ந்த நடையிற்

. ?8 .