பக்கம்:வள்ளுவம் -ஆராய்ச்சி.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காலம் உணரும் அறிவர்களே!

பணிவுடை வணக்கம். “அறிவுக் கல்வி” என்பது இம் மாலைப் பொருள். தொட்டனைத்து ஊறும் மணற் கேணி (395) என்றார் வள்ளுவர். இதன் உட்கிடை என்னை? மணற் கேணியகத்து நீர் என்ற ஒரு பொருள் உண்டு. முன்னரே அமைந்து கிடக்கும் அந்நீர் தோண்டுதோறும் புறப்படுகின்றது. அவ்வளவிற்றே யொழியத் தோண்டுகை தண்ணிரைப் படைப்ப தின்று. இவ்வுண்மை கல்வி யறிவுகளுக்கும் பொருந்தும். புதிதென ஒரியற்கையைப் படைக்கும் ஆற்றல் மக்கட்கு இல்லை. படைப்புற்றுக் கிடக்கும் ஞாலப் பல்லியற்கைகளைக் கண்டு தமதாக்கிக் கொள்ளும் செய்வினையே அன்னோர்க்கு உரித்து. கல்வி என்பது ஒரு தோண்டுவினை. அச் சொல்லே தன் செயலைக் காட்டி நிற்பது. அவ்வினை முன்இல்லா அறிவை ஒருவர்க்கு உண்டு செய்யும் என்றல் அறப்பிழை உழவால் வித்தின் உள்ளிடு வெளிவரல் போலக் கல்வியால் அறிவென்னும் மக்கட் பிறப்பின் உள்ளிடு புலப்படும். உள்ளது தோன்றும் என்னும் உண்மை தெரிப்பான். கற்றனைத்து ஊறும் அறிவு (396) எனத் தோற்றம் மொழிந்தார். :

நாம் அறிவுடையோம்; அது மாத்திரம் அன்று: ஆளுக்கோர் அறிவுத் தனித் தன்மையும் பெற்றுள்ளோம் என்பது திருக்குறள் சுட்டும் இருபெருங் காட்சி. இவ்வுய்த்துணர்விற்குத் தன் உண்மை யறிவே மிகும் (373) என்னும் பகுதியே சான்று.அறிவுப் படைப் பினம் என்றாலும், அவ்வறிவுக் கூறு ஒருத்தர்போல் மற்றொருத் தர்க்கு அமையக் கண்டிலம். மாநில வளர்ச்சி தூய வேற்றுமைக் கண்ணது; ஆதலின், ஒன்றுபோல் அனைவர்க்கும் அறிவமையாமை இயல்பும் நலமும் ஆகும். ஒரு குடிப் பிறந்த மக்கள்'தனித்தனித் துறையில் அறிவாளர் ஆவது, ஒரு ஞான்றும் குடி நலியாப் பெருநலம் பயக்கும் என்பது கண்கூடு. அறிவும் தனியறிவுக் கூறும் உடையேன் என்னும் மெய்ந்நம்பிக்கை செவ்விய வள்ளுவம் ஆகும்;