பக்கம்:வள்ளுவம் -ஆராய்ச்சி.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிறர் உரிமை மறவாப் பெருமக்களே!

மன வணக்கம். வள்ளுவ அரசு’ என்பது இற்றை மாலைப் பொருள். அரசுப்பேச்சு இந்நாள் மக்கட்குப் புதிய கேள்விப் பொருளன்று. கேட்டுக் கேட்டுப் புளித்த பொருள். அரசியல் என்ற வகைத் தலைப்பு இட்டுக் கொண்டு. யாரும் எதனையும் எவ்வாறும் எப்போதும் மணிக்கணக்காகச் சொன்மாரி பெய்து வருகின்றமை யாலும், பிற தலைப்பிட்டபோதும் அரசியலையே நுழைத்துப் பன்னிப் பன்னி மொழிகின்றமையாலும், பொதுவாக நன்மக் கட்குச் சொற்பொழிவு என்றாலே காலக் கழிவு என்றதோர் உணர்ச்சி தோன்றிவிட்டது. படைத்து மொழிவும், உண்மைத் திரிபும், பிற கட்சித் தூற்றலும், தன் கட்சித் தனிப் பெருமையும், வசவு நடையும். வம்புக்கிழுத்தலும், ஆகாக் கத்தும், ஆட் சேர்ப்பும், இன்ன பல போலிக் குணங்கள் குடியரசு என்னும் பெயரால் இற்றைப் பலர் அரசியலின் ஒழுக்கமாயின. நாடு கிெடுக்கும் இந்நிலை பொறாது. கட்சிகளின் மேல் மக்கள் காட்டிவரும் வெறுப்பு பெரிதும் வரவேற்கத் தக்கது. சொல் திருந்தாத கட்சியாளர்க்குத் திருந்திய மக்கள் ஊட்டும் அறிவு இது. மனம் வளர்க்காது வாயை வளர்த்த பேச்சாளர்களுக்கு, ஒழுக்கச் செவியுடைய மக்கள் சுட்டும் நாண் வழி இது. யான் கண்ட அரசு வள்ளுவங்களை, மேலைக்குற்றங்கள் இன்றி எடுத்து மொழிவேன் என்று நம்புமின்! மாறுபட்ட கருத்துக்கள் இருப்பின் இருக்குமே யன்றி, மனப் புண்ணுறுத்தும் சொற்கள் ஒன்றேனும் வழுக்கியும் உரையேன் என்று துணிமின் ஆதலின், என் வள்ளுவ அரசுப் பேச்சினை மனந் திறந்து கேட்க வேண்டுவல்.

இற்றை உலகை நினையுங்கால், நமக்கு முன் தோன்றும் அரசியல் எண்ணங்கள் பலப்பல. உலகம் ஒன்று: உலக மக்கள் ஓரினம் என்றும், ஒர் உலகவரசும் உலகப் பொதுப்படையும் வேண்டும் என்றும் பேசுகின்றோம். நாட்டுச் சிக்கல்களைக் கூட்டுப் பேச்சால் தீர்த்துக் கொள்ளல் வேண்டும்; தீர்வு காணற்கு உரிய வழி