பக்கம்:வள்ளுவரின் வாழ்வியல் சிந்தனைகள்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13. அறிவியல் நோக்கு வள்ளுவர் பெருமான் ஒரு சிறந்த அறிவியல் நோக்குடையவர். பல குறள்மணிகளில் இந்நோக்கு ஒளிவிடு கின்றது. நிலையாமையை வற்புறுத்தி உறுதிப்படுத்தும், நாளென ஒன்றுபோல் காட்டி உயிரீரும் வாளது உணர்வார் பெறின் (334) என்ற குறள் மணியில் இந்நோக்கு ஒளிர்வதைக் காணலாம். உரை மன்னர் பரிமேலழகர் இதனைத் தம் உரையில் அடியிற் கண்டவாறு விளக்குவார் "காலம் என்னும் அருவப் பொருள் உலகியல் நடத்தற் பொருட்டு ஆதித்தன் முதலிய அளவைகளால் கூறுபட்டதாக வழங்கப்படுவதல்லது தானாகக் கூறுபடாமையின் நாள் என ஒன்றுபோல், என்றும் அது நாள் வாள் என்று உணரமாட்டாதார் நமக்குப் பொழுது போகா நின்றது என்று இன்புறுமாறு நாளாய் மயக்கலின் காட்டி என்றும், இடைவிடாது ஈர்தலால் வாளின் வாயது' என்றும், அஃது ஈர்க்கின்றமையை உணர்வார் அரியராகலின் உணர்வார்ப் பெறின் என்றும் கூறினார். உயிர் என்னும் சாதி ஒருமைப் பெயர் உடம்பின்மேல் நின்றது. ஈரப் படுவது அதுவே யாகலின் வாள் என்பது ஆகுபெயர். இனி இதனை நாள் என்பதொரு பொருள் போலத் தோன்றி உயிரை ஈர்வதொருவாளாம் என்று உரைப்பாரும் உளர் மணக் குடவர்'