பக்கம்:வள்ளுவரின் வாழ்வியல் சிந்தனைகள்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவரின் வாழ்வியல் சிந்தனைகள் 110 இதனை விளக்குவோம். இதற்கு முந்திய குறளில் கேள்வியை செவிச்செல்வம் என்று போற்றினார். மக்களால் அதிகமாகப் போற்றப் பெறுவது செல்வம்'. இல்லறத்தின் பயனாகிய மக்கட்பேற்றை மக்கட்செல்வம் என்று கூறுவதை ாண்டு நினைத்தல் தகும். வள்ளுவர் குறளை ஆழ்ந்து நோக்கிப் பொருள் காணும் போது தினையளவு போதாச் சிறுபுன்னிர் நீண்ட பனையளவு காட்டும் படித்தான் என்ற பாடல் நினைவிற்கு வரும். ஒரு சிறு புல் நுனியில் தினையளவுள்ள நீர்த்துளியில் ஒரு பனைமரம் தென்படுவது போல். குறளின் ஒரு சிறு பதத்தில் பெரும் பொருள் காணப்படும் என்ற கருத்து நினைவில் எழும். இதை நினைவில் கொண்டு மேற்காட்டப் பெற்ற குறளில் உள்ள சொல்லையும் சொற்றொடரையும் நோக்குவோம். இப்படி நோக்கிதான் மேற்குறிப்பிட்ட பரிமேலழகரின் உரை அமைந்தது. 'இல்லாதபோழ்து ஒருவர் கம்பராமாயணத் திலுள்ள வாலிவதைப் படலம். விராடன்வதைப் படலம், இராமன் கானகம் ஏக வேண்டும் என்ற சிற்றன்னையின் சூழ்ச்சியைக் கேட்டவுடன் இலக்குவனுக்கு எழுந்த சினம் அதனை அடக்க இராமன் மேற்கொண்ட முயற்சி போன்ற பகுதிகளை ஜகவீர பாண்டியன், உலக ஊழியனார் போன்ற பெரும் புலவர்கள் ஆற்றும் சொற்பொழிவில் உள்ளத்தைப் பறிகொடுத்து ஆழ்ந்து அநுபவிக்கும்போது பசிதோன்று வதில்லை. பசியை மறந்து சொற்பொழிவைக் கேட்டுக் கொண்டே இருப்பவர்களைக் காண்கின்றோம். இஃது இலக்கியச் சுவையில் ஈடுபட்டோர் நிலை, 1. திருவள்ளுவமாலை 5 (கபிலர் பாடல்)