பக்கம்:வள்ளுவரின் வாழ்வியல் சிந்தனைகள்.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

459 நோவற்ற வாழ்வு வேலை செய்கின்றதா செரிப்பு வேலை சீராக நடைபெறு கின்றதா என்று ஆராயக் கற்றுக் கொண்டால் உடல் நலத்தைக் காத்துக் கொள்வது எளிதாகும்: முன்உண்ட உணவு எவ்வாறு செரிமானம் ஆனது என்பதை ஆராய்ந்து அறிந்து, அந்த அறிவைக் கடைப் பிடித்துப் போற்றிப் பிறகு அடுத்த வேளை உணவை உண்ண வேண்டும்; அவ்வாறு உண்டால் உடம்பிற்கு மருந்து என்று ஒன்று வேண்டியதில்லை. மருந்தென வேண்டாவாம் பாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின் (942) இதற்குச் சரியான அளவுகோல் பசித்துப் புசி என்பது. இதனை வள்ளுவர் பெருமானே, அற்றது அறிந்து கடைப்பிடித்து மனதல்ல துய்க்க துவரப் பசித்து (944) என்று சற்று விளக்கமாகவே அருளியுள்ளார். துவரப்பசித்து - மிகப் பசித்து என்பதை ஆழ்ந்து கருதுகின்றோம். இன்ன அளவு வேண்டும் என்று அறிந்து உண்பதே கடமை. அதுவே உடம்பைப் பெற்றவன் அந்த உடம்பை நெடுங்காலம் காத்துச் செல்லும் வழியாகும். இதனை, அற்றால் அளவறிந்து உண்க அஃதுஉடம்பு பெற்றான் நெடிதுஉய்க்கு மாறு (943) என்ற குறள்மணியின் ஒளியில் கண்டு மகிழலாம். 2. செரிமானம் பற்றி பல ஆங்கில நூல்கள் வெளிவந்துள்ளன. அவற்றைப் படித்துப் பயன்பெறலாம்.