பக்கம்:வள்ளுவரின் வாழ்வியல் சிந்தனைகள்.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

197 ஊடலும் - கூடலும் நுகரும் இன்பம் இல்லறம் செய்தார் பெறும் துறக்கத் தின்பம் கூறியவாறு. புதிதாகத் திருமணம் ஆகி முதன் முதலாக இன்ப வாழ்வில் நுழைபவர் இன்பத்தை நுகரும்போது பெறும் அநுபவம் அறிவு விளக்கம் ஏற்படுங்கால் அறியாமையின் எல்லையையும் காண்பதுபோல், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தடவையும் இன்பத்தைத் துய்க்கும் போது புணரும்போது இன்னும் நுகராத பகுதியின் எல்லை யினைக் காண்பது போன்ற உணர்வு தோன்றும் என்பதாகக் குறிப்பிடுக்கின்றார் வள்ளுவர் பெருமான். அறிதோறும் அறியாமை கண்டற்றால் காமம் செறிதோறும் சேயிழை மாட்டு (1410) என்பது வள்ளுவம். இன்பவாழ்வில் காணும் மூன்று நிலைகளையும் குறிப்பிடுவார். முதலாவது புணர்தல் இனிதாவதற் பொருட்டு நேரிடும் ஊடல் இரண்டாவது அந்த ஊடலை அளவறிந்து நீக்குதல் மூன்றாவது அதன்பின் நடைபெறும் புணர்தல். அடுத்து ஊடல் நிலையைக் காண்போம். தன்னையும் நெஞ்சையும் வேறு வேறாகப் பிரித்துக் கொண்டு பேசும் இலக்கிய மரபு ஒன்று உண்டு. அதனை வள்ளுவர் பெருமானும் கையாளுகின்றார். நெஞ்சை நோக்கி தலைவியே பேசுகின்றாள். காதல் என்பது அவர் கருதிய புலவிக்கு உட்படுதல். அது அப்புலவிக்கு உடம்படுதலாகிய செயல் தனக்கு ஆகாது என்கின்றாள். 'ஒரு கருத்தைத் தாமாக அறிந்து செய்யமாட்டா தார் செய்வாரைக் கண்டாயினும் செய்வர். நீ நெஞ்சு அதுவும்