பக்கம்:வள்ளுவரின் வாழ்வியல் சிந்தனைகள்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவரின் வாழ்வியல் சிந்தனைகள் 2C என்று தொடங்குகின்றார். இதனால் மழையின் அருமைப் பாடு விளக்கம் அடைகின்றது. இக்காலத்தில் அறிவியல் ஆற்றலால் செயற்கையாய் மழை பெய்விக்கலாம். பரவலாக நாட்டில் மழை வளத்தை உண்டாக்கலாம். வறுமையைப் போக்கலாம் என்று அறிஞர்கள் கருதுகின்றனர். இந்த நல்லெண்ணத்தை நன்றி யறிதலுடன் உலகம் போற்றும், பாராட்டும் என்பதில் ஐயம் இல்லை. ஆனால் அந்தச் செயற்கை மழையில் அமிழ்த ஆற்றல் கூடுவதற்கு வழி இல்லை. மழையை அமிழ்தம் என்று கூறுவதற்கு ஒரு காரணமும் தெளிவிப்பார். மழையினால் உலகம் நெடுங் காலமாக நிலை பெற்று வருகின்றது. 'அமிழ்தம் என்பது னையும் அற்றுப்போகாமல் நீள வாழவைக்கும் தன்மை யுடையது. உலகம் அங்கனம் நீண்டு நிலை பெற்று வருதலால் மழையை அமிழ்தம் என்று துணிய வேண்டியதாக உள்ளது என்பது அவர் கூற்று. மழையை அவ்வப்போது பெற்றும், பயிர்களில், காய்கறிகளில், குடிநீரில் அமிழ்தத் தன்மை அடைந்துதான் மண்ணுலகம் நீள நடைபெற்று வருகின்றது. மழை இல்லாவிட்டால் பசி வருத்தும் .ே உழவர் உழர் 4. எல்லாம் அழியும் 5. புல்லும் இராது.(6. கடலின் இயலும் குறையும்(7). அருள் வழிபாடும் வள்ளண்மை நோன்புகளும் சிறப்பு ஒழுக்கங்களும் நிலைபெறா8. மழையின் தன்மையை உடன்பாட்டால் இரண்டு குறளில் (11,12 கூறிய பெருமான் ஏனைய எட்டுக்குறளில் (13-20) மழை இல்லாவிட்டால் ஏற்படும் வறட்சி நிலையை எதிர்மறையில் விளக்குகின்றார்.