பக்கம்:வள்ளுவரின் வாழ்வியல் சிந்தனைகள்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

65 நன்றி மறவாமை நளன் கதையில் ஒரு காட்சி: தமயந்தியின் இரண்டாம் சுயம்வரம்' என்ற செய்தி கேட்டுக் குண்டினபுரத்திறது வருகின்றான் ருதுபர்ணன், நளன் அ.பொ. سینمایی ! ! கைக் န္က ႏိုင္ဆိုႏို அ:ெனுக் :. i தேரோட்டி சமையல்காரனாகவும், செயல் . கோடகன் என்ற பாம்புக்கடியில் உருமாதி இருந்தவன் உருமாறியுள்ள தேர்ப்பாகனைச் சோதிக்க தன்பிள்ளைகளுடன் தோழி யொருத்தியை அனுப்புகின்றாள். பிள்ளைப் பாசம் எவரையும் விடாது. நளன் தன் பிள்ளை களைக் கண்டதும் செய்த செயல்களை உணர்த்தும் பாடல. மக்களைமுன் காண மனநடுங்கா வெய்துயிராப் புக்கெடுத்து வீரப் புயத்தனையா - மக்காள்நீர் என்மக்கள் போல்கின்றீக் பார்மக்கள் என்றுஒைத்தான் வன்மக் களியனை மன் ". என்பது நளன் மறைந்தொழுகும் நிலையிலிருந்தும் தன் பிள்ளைகளைக் கண்டமாத்திரத்தில் தன்னிடத்தே அடக்கொண அன்பு எழுந்ததால் தன்னையும் மறந்து மனநடுங்கிப் பெருமூச்செறிந்து அவர்களை வாரியெடுத்துத் தோளோடு சேர்க்கின்றான். இந்நிலையில் தன்னிலைமைபற்றிய எண்ணம் அவனுக்கு உதித்தபடியால் அவன் தன்னை மறைத்துக் கொள்ள வேண்டி அன்னியன் போல நடிக்கின்றான். அப்பிள்ளைகளை நோக்கி, "நீங்கள் யாருடைய பிள்ளைகள்? என் குழந்தைகள் போன்று இருக்கின்றீர்களே?" என்று உரைக்கின்றான். இங்குக் கூறியவாறு அன்பு எந்நிலையிலும் வெளிப்படும் என்பதை, - 'அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ் ஆர்வலர் புன்கணிர் பூசல் தரும்"(71)" என்ற குறட்பாவினாலும் இதனை உணரலாம். 15. நளவெண்பா கலிநீங்குகாண்டம் 316 15. அன்புடைமை 1