பக்கம்:வள்ளுவரின் வாழ்வியல் சிந்தனைகள்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

89 வாழையும் வள்ளுவமும் குறிப்புக்கு வாழையைத் தவிர வேறு எடுத்துக் காட்டு காண்டல் அரிது. வாழையின் பொருள் எல்லாம் வேளாண்மையில் - அதாவது பயன்படுதலில் சற்றும் இழுக்கில்லாதவை. அடி யிலுள்ள வேர்க்கிழங்கு. வாழைப் பட்டை நார், வாழைத்தண்டு. வாழை இலை, சருகு, பூ, காய், கனி முதலிய அனைத்தும் தலை சிறந்த நிலைகளில் பயன்படுகின்றன. பட்டையின் சாறு கூட மருந்துக்குப் பயன்படுகின்றது. அதன் உலர்ந்த சருகு கூட உண் கலனாகவும் தொன்னைகளாகவும் உதவுகின்றது. வாழையில் பயன்படாத பொருள் எதுவுமில்லை. முற்றிலும் பயன்பட்டு வாழை இங்ங்னமே பொருள்திறனை புலப்படுத்துகின்றது. அறத்திறம்: வாழையின் அறத்திறமோ உள்ளத்தை உருக்கி ஒருங்கே கொள்ளை கொள்ளுகின்றது. அறத்தின் திறம் என்பது இங்கு ஒழுங்குமுறை. அதுவும் கரவற்ற ஒழுங்கு முறை. சில மரங்களில் ஒழுங்கு முறையே இருப்பதில்லை. அவை முடிச்சுகளும் மொக்கைகளும் மலடுகளும் உடை யவை. வாழையில் பெரும்பாலும் அக்கரவுகள் இல்லை. லளத் துக்கு ஏற்றபடி வஞ்சனை இல்லாமல் வளர்ந்து குழந்தைகள் போல் இல்லங்களில் ஆடி அசைந்து குழைவாய் விளங்குவன. அடியேன் காலையிலும் மாலையிலும் இந்தக் காட்சியைக் கண்ணுற்று அநுபவித்து மகிழ்கின்றேன் வாழையின் ஒவ்வொரு பகுதியிலும் இவ்ஒழுங்கு சிறப்பு மேம்பட்டுத் திகழ்கின்றது. அடியில் தோன்றும் கன்றுகள் தம் தாய் வாழையைச் சுற்றி அணைவன போல் வளைத்துக் கொண்டு அதன் ஆதர விலும் அரவணைப்பிலும், அதன் மடியிலேயே அவ்வளவு ஒழுங்கில் வளர்ந்த நிலையில் எழுகின்றன. மட்டைகளும் அப்படியே உரிக்க உரிக்க மட்டையாய் வளைந்து கவ்விப் பற்றிய அடுக்கு ஒழுங்கில் அமைந்துள்ளன. தொட்டுணர்வுக்கு இதமாக வழுவழுப்பிலும் மென்மையிலும் மேம்படுத்தித்