பக்கம்:வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள் *99

யாக மேல் நிலையில் வாழ்கிற மக்களால், விரும் பப்படுகிற ஒரே காரணத்தால், இந்த அளவுக்குப் புகழைப் பெற்றுக்கொண்டிருக்கிறது.

பணக்காரர்கள் மட்டுமல்ல, பெரும் பதவி யினை வகிப்பவர்களும், சில சமயங்களில் ஆட்சி பீடித்தில் இருப்பவர்களும் இந்த விளையாட்டில் கொண்டிருக்கின்ற மோகத்தால், வசதிகளைப் பெருக்கித் தருகிற காரணத்தால்; பொழுதுபோக்கு வதற்கு எளிதாக நாள் முழுதும் விளையாடப் படுகின்ற சூழ்நிலையால், கிரிக்கெட் ஆட்டத்திற்கு வரவேற்பு அதிகம் என்றேன். -

மற்ற விளையாட்டுக்களைப் பற்றியும் சிறிது விளக்கமாகக் கூறினால், புரிந்து கொள்ள முயல் வேன் என்றார் வள்ளுவர்.

விளையாட்டு என்பது விருப்பத்திற்குரிய விளைந்த செயல் இயக்கம் என்பதாகப் பொருள் தருகிறது. மக்கள் தங்கள் உடலில் மறுமலர்ச்சி பெறவும், புது வளர்ச்சி கொள்ளவும் இப்படிப் பட்ட இனிய இயக்கங்களை வளர்த்துக் கொண்டனர். -

உடல் இயக்கத்தின் பொழுதே, ஒன்றாகக் கூடி வாழ்கிற ஒற்றுமை உணர்வை வளர்க்கும் முயற்சியில் ஈடுபட்டதால்தான், விளையாட்டுக்கள் வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாறிக் கொண்டன .