பக்கம்:வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையr

திரட்டுங்கள் அதுதான் உங்களுக்கு வலிமையைக் கொடுக்கும், வலிமையானது, எஃகு இரும்பினால் செய்யப்பட்ட கூரிய ஆயுதத்திற்கும் மேலான கூர்மையைக் கொண்டது.

அந்தக் கூர்மையே எதிர்க்கும் பகைவரை வேரோடு சாய்க்கும். இப்படிப் பகைமையை அழிக்கும் வீரியம் கொண்டது என்பதால் தான், பொருளைச் செய்க, என்றேன். அது எங்கால வாழ்க்கைச் சூழலாகவே அமைந்திருந்தது.

ஒவ்வொரு தேயத்து மன்னனும், தனது நாட்டை, தன்னாட்டு மக்களை அந்நியர் படை யெடுப்பிலிருந்து பாதுகாக்கவே முனைந்து நின் றான். தம் நாட்டு மக்களை வலிமை வாய்ந்தவர் களாக மாற்றுவதற்காக முயன்றான். அதில் வெற்றி யும் பெற்றான்.

மக்கள் மனதிலே வீரம் விளையாடிக் கொண்டேயிருந்தது. தங்கள் வீரத்தைக் காட்ட வேண்டும். வெற்றியை நிலை நாட்ட வேண்டும். என்ற வேக உணர்ச்சி மேலிட, போர்க்களத்தையே எண்ணி, ஏற்றம் கொப்பளிக்க மக்கள் வாழ்ந்த வாழ்க்கை நிலையைத் தான் இப்படிப் பாடினேன்.

விழுப்புண் படாதநா ளெல்லாம் வழுக்கினுள் வைக்குங்தன் னாளை எடுத்து. (776)