பக்கம்:வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 04 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

உங்கள் காலம் தமிழர்களின் பொற்காலம் என்று நாங்கள் அறிகிறோம். இன்று இந்த உலகம் முழுவதும் தூரத்தில் குறைந்தும், காட்சியில் ஒன்றாகக் கலந்தும் உறவாடுகிற நிலைமையில் சுருங்கிவிட்டிருக்கிறது.

நீங்கள் கூறுகிற கருத்தை நான் அப்படியே ஏற்றுக் கொள்கிறேன். உங்கள் காலத்தில், தமிழகம் போலவே கிரேக்கம் என்ற ஒரு தேசமும் இருந்தது. அந்த கிரேக்க மக்கள் வாழ்க்கையும் ஏறத்தாழ நம் தமிழக மக்கள் வாழ்க்கையைப் போலவே வாழ்ந்து சென்றிருக்கின்ற சிறப்பான வரலாறாகவே எழுதப்பட்டிருக்கிறது.

அக்கால கிரேக்க மக்களும், போர் வாழ்க் கையே புகழ்வாழ்க்கை என்று வாழ்ந்து போயிருக் கின்றார்கள்.

தமிழ்நாட்டில் மூவேந்தர்கள், குறுநில மன்னர் கள் என்று பிரிந்து அரசமைத்துக் கொண்டு, ஒரு வருக்கொருவர் தாக்கிக் கொண்டு படையெடுத்து, முற்றுகையிட்டு, ஒருவரை ஒருவர் அடக்கி ஆள மடக்கி வாழ முற்பட்டது போலவே, கிரேக்க தேசமும் பல சிறு சிறு நாடுகளாகப்பிரிந்து கொண்டு, அன்னிய தேசம் ஒன்றான ரோம் எனும் தேசத்திற்கு அடிமையாகும் வரை, போரிட்டுக் கொண்டேதான் வாழ்ந்திருந்தார்கள்.