பக்கம்:வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விளையாட்டாக ஒரு சிந்தனை!

வடமொழிவேதத்தால் சிறப்பு பெறுகிறது. தமிழோ குறளால் சிறப்பு பெறுகிறது.

என்று மிகவும் பெருமையுடன் பாடியிருக்கிறார், வண்ணஞ்சாத்தனார் என்னும் பெரும்புலவர்.

வேதத்தின் வேதமாக, வளமும் நலமும் பரணி பாடும் வாழ்க்கையின் கீதமாக, அறம் பேணும் அன்பின் நாதமாக விளங்கும் குறட்பாக்களைத் , தமிழுக்குக் கொடுத்த வள்ளுவர் பற்றி, எழுதாத பேராசிரியர்களே இல்லை. வெளிவராத நூல்களே இல்லை.

என்றாலும், எல்லாவற்றையும் ஏற்றமுறப் பாடிய வள்ளுவர், விளையாட்டுக்கள் பற்றி எதுவுமே சொல்லவில்லையா என்று எண்ணிப் பார்த்தேன்.

என் சிந்தனைக் குரலுக்குப்பதிலாக வந்த குறள்கள் பற்றிய கருத்துக்களே, வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள் என்ற நூலாக, வடிவம் பெற்றிருக்கிறது.

விளையாட்டுத்துறைத் தமிழ் இலக்கியத்தின் சிறப்புக்கு இந்நூல், ஒரு மைல் கல்லாக அமையும்.

இனி, உங்கள் சிந்தனைகளை விளையாட விடலாம்,

அனபுடன. டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா.