பக்கம்:வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

0 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

சோம்பலை நீக்கி. சுகத்தினை விளைத்து சுறு சுறுப்புடன் திறமைகளை வளர்க்கும் இடமான களத்திற்கு, ஆடுகளம் என்ற பெயர் வந்திருக்கிறது.

ஆர்வமுடன் ஆடுகின்ற, விளையாடுகின்ற ஆடுகளம் என்ற பெயர் இருப்பது சரிதான். ஆனால் நமது அருமைத் தமிழ்ச் சொல்லில், ஆடு என்ற சொல்லுக்கு வெற்றியென்ற ஒரு பொருள் உண்டு. அதைத் தான் நமது பண்டைய தமிழ்ப் புலவர்கள் அனைவரும் கையாண்டிருக்கின்றனர் என்றேன்.

எப்படிப் பாடியிருக்கிறார்கள் என்றார் வள்ளுவர்.

அடல், ஆடல், ஆடு, கொற்றம், கடத்தல் புறங்காணல், மாறழித்தல் வலம், வாகை, விறல், வெற்றி என்னும் தமிழ்ச் சொற்கள் எல்லாமே, வெற்றி என்ற பொருளையே குறித்து நிற்கின்றன.

to : ,

சங்க காலத்தில் அரசாண்ட சேரமன்னர்களின் ஒருவனுக்கு ஆடுகோட்பாடு சேரலாதன் என்பது பெயர். . . - -

அவனுக்கு ஏன் அந்தப் பெயர் ஏற்பட்டது என்றால், வெற்றியையே (ஆடு) தனது கொள்கை யாகக் (கோட்பாடு) கொண்டு, வெற்றிகளைக் குவித்து வீறுபெற்ற மன்னனாக வாழ்ந்தான் என்பதால் தான்.