பக்கம்:வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Jl 44 டாக்டர். எஸ். நவராஜ செல்லையா

தமிழ்ச் சொல்லை, பலமுறை தனது அரிய நூலான திருமந்திரத்தில் பெய்திருக்கிறார்.

உலகெங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் சிவன்; அவனது அருள் செயல் எல்லாம் விளையாட் டாகவே கருதப்படுகிறது.

அந்த விளையாட்டு என்கிற கூத்தை அவன் ஆடுவதால்தான், அவனுக்குக் கூத்தன், நடராசன்

என்றும் பெயர்களுண்டு. o

அவன் ஆடுகின்ற ஆனந்தக் கூத்துக்குரிய இடத்தை ஆடரங்கம் என்று கூறுகிறார் திருமூலர்.

தானந்தம் இல்லாச் சதானந்த சத்திமேல் தேனுந்தும் ஆனந்த மாகடம் கண்டீர். ஞானம் கடந்து கடம் செய்யும் கம்பிக்கு அங்கு ஆனந்தக் கூத்தாட ஆடரங்கம். ஆனதே (2678)

ஆனந்தம் ஆடரங்கம் ஆனந்தம் பாடல்களே (2679)

அம்பலம் ஆடரங்கு ஆக (2713).

இவ்வாறு பல பாடல்களில் ஆடரங்கம் என்ற சொல் வந்திருக்கிறது.

இந்த இரண்டு சொற்களுக்கும் உள்ள பொருள்

துணுக்கத்தையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.