பக்கம்:வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

தமிழில் சுவைதான் இருக்கிறது. தமிழ்ப் பேச்சோ தரம் கெட்டது போல், பல மொழிகளால் பாழாகிப் போனது. உடை, உணவுப் பழக்க வழக்கங்களும் மாறிக் கொண்டன.

தமிழ் நிலமும் தரம் மாறிக்கிடக்கிறது: என்றெல்லாம் சொல்லிக் கொண்டே வந்த வள்ளுவர், தரையின்மீது அமர்ந்தவுடன், சுற்று முற்றும் மீண்டும் ஒரு முறை பார்த்தார்.

ஏதோ சிந்தனையில் ஆட்டபட்டவர் போல, கண்களை மூடிக் கொண்டார். ஒய்வு தேவை. போலும்!

அவரது ஒய்வு நமக்கு சாதகமாக அமைந்து விட்டது. நானும் அவரை ஒரு முறை பார்த்துக் கொண்டேன். அவர் பற்றிய ஒரு வாழ்க்கைக் குறிப்பு, எனது சிந்தனையில் புயலாகப் புகுந்து விளையாடியது.

அந்தச் சிந்தனையின் சிலிர்ப்பை உங்களிடம் பகிர்ந்து கொள்ள, இதுவே தக்கத் தருணம் என்பதால், அவர் பற்றிய வாழ்க்கைக் குறிப்பை, இங்கே கூறி விடுகிறேன்.

(முதற் பகுதி முடிகிறது)