பக்கம்:வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

கிரேக்க மாமேதைகள், தத்துவ ஞானிகள். பேரறிஞர்கள் என்று புகழப்பட்ட அனைவருமே, இந்த ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொண்டவர் என்றே வரலாறு கூறுகிறது.

கி.மு. ஐந்தாம் நூற்றாண்டின் மத்தியிலே, பெரிய சரித்திர ஆசிரியராக விளங்கிய கிரடோடஸ், தத்துவ மேதையான சிந்தனைச் சிற்பி சாக்ரட்டீஸ்; பெருங்கவியாகத் திகழ்ந்த பிண்டார் சிற்ப மேதை பிடிலஸ் போன்றவர்கள், பந்தயங்களிலே பங்கு பெற்று உலா வந்தனர் என்பது வரலாறு.

பேரறிஞர் என்று புகழப்பட்ட பிளேட்டோ என்பவர், தனது இளமைக் காலத்தில், மல்யுத்தப் போட்டியில் வென்று ஒலிம்பிக் வீரராகத் திகழ்ந்தார்.

சிந்தனைச் சிற்பி சாக்ரட்டீசின் சிறந்த மாணவன் பிளேட்டோ பிளேட்டோ எனும் பட்டப் பெயர் இவருக்கு வந்தது எப்படி? அரிஸ்டோகிளிஸ் என்று பெயர் கொண்ட இவருக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது?

இவருக்குப் பரந்த தோள்கள் இருந்ததால் தான், பட்டப் பெயராக பிளேட்டோ என்று வந்தது.

இவற்றை ஏன் இங்கே இவ்வளவு விளக்கமாகக் கூறுகிறேன் என்றால், உடல் வலிமைமிக்கவர்க்ளே,