பக்கம்:வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையr

பொருளாக அமைந்தன, கருவாகத் திகழ்ந்தன. என்பதை, அவரது குறள்கள் எல்லாம், நமக்கு உள்ளங்கை நெல்லிக்கனியாக விளக்குகின்றன.

வள்ளுவரின் குறள்களை நாம் ஆழ்ந்து படிக்காமலேயே, அவரது உவமைகள் நமக்கு, நல்ல பல சுவைகள் நல்குவதை அறிய முடியும். ஏனெனில், எந்தக் கருத்தையும் இனிதாகவும் எளிதாகவும் எடுத்துரைக்க, அவர் உவமையைத் தான் அதிகமாகக் கையாளுவார்.

ஒருவருக்கு, உள்ளத்தில் எந்தக் கொள்கை ஆழமாகப் படிந்திருக்கிறதோ, பதிந்திருக்கிறதோ, அந்தத் தன்மையாகவே உவமைகள் அமைந்து. விடும்.

கவிஞன் காமச் சுவையை அதிகம் விரும்பு கிறவனாக இருந்தால், அவன் கொடுக்கின்ற உவமையெல்லாம், காமப்பாங்காகவே கொட்டும்.

கவிஞன் கடவுள் பக்தனாக இருந்தால், அவன் தருகின்ற உவமைகள், கடவுள் தொடர்புள்ள தாகவே வந்து விழும்.

கவிஞன் வீரனாக இருந்தால், அவன் கவிதை களில் வேகம் இருக்கும். மோதுகின்ற வேட்கையின் தொனி மிகுந்திருக்கும். சொல்கின்ற உவமைகளில் தீரமும், போரிடும் காட்சி ஆரவாரமும் அங்கே மிகுந்து கிடக்கும்.