பக்கம்:வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

† 68 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

போர்க்களத்தையும் ஒப்பிட்டுக் காட்டுகிறார் வள்ளுவர். -

வாள் அக்கால மக்கள் உடலின் ஒரு அங்கமாகத் திகழ்ந்தது போலும்.

இந்த உவமையைக் கூறியவுடன், அவர் இதயம் நிறைவு அடையவில்லை போலும். இன்னும் கொஞ்சம் விவரமாக, விளக்கமாக, வேகமாகக் கூறவேண்டும், என்பது அவரது விருப்பம் போலும்.

ஒளிபொருந்திய கூர்வாளைப் பிடித்திருக்கும் பேடியைப் போல என்று சற்று கோபமாகவே பேசுகிறார்.

பகையகத்தில் கூர்வாளைப் பிடித்துக் கொண் டிருக்கும் பேடியால் போரிட முடியுமா? அது போலவே, கற்றோர் அவை முன்னே கால் நடுங்கிக் கொண்டிருக்கும் கற்றவன் நிலையும் என்கிறார்.

பேடி என்பது எவ்வளவு வன்மையான சொல்.

அந்த அளவுக்கு, வள்ளுவரின் நெஞ்சம் வீரம் மிகுந்ததாக விளங்கியிருக்கிறது. போர், பகை,

வாள், என்றதும் அவரது பேருணர்ச்சி வேகம் பெற்றுக் கொண்டுவிட்டது.

பகையகத்துப் பேடிகை ஒள்வாள் அவையகத்து அஞ்சுமவன் கற்ற நூல். - (727)