பக்கம்:வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

ஆமாம். வலிமையற்றவர்கள் வாழத் தெரியாதவர்கள். வாழ்வாங்கு வாழ முடியாத வர்கள். அவர்கள் வாழ்க்கையே இருளாகத்தான் ஆகும். மருளாகத் தான் போகும். மயங்கும் கலங்கும் என்றார் வள்ளுவர்.

அளவளாவு இல்லாதான் வாழ்க்கை, குளவளாக்

கோடின்றி நீர்நிறைந் தற்று. (523)

கரையில்லாத குளம் ஒன்றில், நீர்ப்பெருக்கு நிறைந்து வந்தாலும், அங்கே தங்க முடியா தல்லவா 1 குளம் வறண்டு தான் கிடக்குமே தவிர, நிரம்பிக் காட்சியளிக்க முடியாது.

அதுபோலவே, உடலில் உண்டாகிற இளமை யையும். உண்டாக்குகிற வளமையையும் காத்து வாழாதவர்கள் வாழ்க்கையும், வறண்ட குளமாக, எதையும் விளைவிக்காத நிலமாக, பதர்கள் குவிந்து கிடக்கும் களமாகத் தான் விளங்கும்.

இதை இந்தக் காலத்து விளையாட்டு வீரர்கள், இதயத்தில் கொள்ள வேண்டும் என்றார் வள்ளுவர்.

வலிமை மிகுதியில்லாத உடல் உள்ளவர் களைப் பார்த்தாலே தெரிந்து விடுகிறது. வலிமையை வளர்த்துக் கொள்ளும் வழிகளைச் செய்யாமல், அந்த வலிமையற்ற நிலையை மறைத்து, வலிமையுள்ளவர்கள் போல் நடிப்பவர் கள் தான், மிகுதியாக இருக்கிறார்கள் என்றேன். நான்.