பக்கம்:வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள் 187

5. நிரவுக்காற்று 6. தும்மற்காற்று 7. விழிக்காற்று 8. கொட்டாவிக்காற்று 9. இமைக்காற்று 10. வீங்கற்காற்று

இந்த பத்து வகைக் காற்றைப் பயிற்சிகள் மூலம், பயன்படுத்திக் கொண்டால், குரங்காகிய மனதை அடக்கலாம். உடம் பாகிய கோட்டையை உயர்வாகக் கட்டிக் கொள்ளலாம்.

கடைசியாக ஒன்று. நமது சித்தர் திருமூலர் கூறுகிறார் பாருங்கள். யோகப் பயிற்சிகளை ஏழு ஆண்டுகள் தொடர்ந்து செய்தால், காற்றினும் வேகமாக நடக்கவும், காரியங்களை இயக்கவும் முடியும். -

எட்டாண்டுப் பயிற்சிகள் செய்தால், நரை திரைகள் தோன்றாது. ஒன்பது ஆண்டுகள் பயிற்சிகளில் ஒப்பற்ற பேறுகளைப் பெறமுடியும் என்று திருமுலர் தருகிற தந்திரத்தைப்பாடுகிறேன்

ஏழு ஆனதிற் சண்ட வாயுவின் வேகியாங் தாழா நடை பல யோசனை சார்ந்திடும் சூழான ஓரெட்டில் தோன்றாது நரைதிரை தாழான ஒன்பதிற் தான்பர காயமே.

(திருமந்திரம் 627ம் பாட்டு)

அளவறிந்து என்ற சொல்லுக்கு நீங்கள் கூறுகிற விளக்கத்தைக் கேட்டு நானே சற்று அயர்ந்து விட்டேன். உங்கள் உடல் பற்றிய ஆய்வும் அதன் அரிய வளர்ச்சிக்கு உதவுகிற காற்றையும், மிகுதி