பக்கம்:வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள் 19.3

இப்படி வலிமை குறைந்து, வேதனைகளை அனுபவிக்கிறோமே; அப்படிப்பட்ட வேண்டாத செயல்களை விலக்கிவைப்போம், விட்டு விடுவோம் என்று யார் நினைக்கிறார்கள்? முயற்சிக்கிறார்கள்?

ஒரு செயலில் துன்பம் படப்பட, அதிலே அதிகமான ஆசையும் விருப்பமும் கொண்டு மீண்டும் மீண்டும் அதையே செய்துதான் அழிந்து போகிறார்கள் மனிதர்கள். இதுதான் மனித நீதியாக, மரபாக, மறையாத பழக்க வழக்கமாக வந்து கொண்டே, வளர்ந்து கொண்டேயிருக்கிறது. இதுதான் எனக்கு அதிக வருத்தத்தை அளிக்கிறது என்றார்.

இழத்தொறு உம் காதலிக்கும் சூதேபோல் துன்பம் உழத்தொறு உம் காதற்று உயிர் (940)

வலிமையே வாழ்வு ன்ற கொள்கை வழி மாறும் போது, பலமின்மை வீடு அமைத்து,

மெத்தை விரித்து, படுத்துக் கொள்கிறது.

வலிமைக்கு இணையாகக் கூற இங்கு எதுவுமே

இல்லை. வலிமை இல்லை என்றால் வாழ்வே

இல்லை என்பதைத்தான், வறுமை என்பது போல, இன்மை, இல்லை என்றே குறிப்பிட்டேன்.

இன்மையின் இன்னாதது யாதெனின் இன்மையின் இன்மையே இன்னாதது. (1041)