பக்கம்:வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

212 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

முன்னே காண்பது போல, காட்டி மகிழ்விக்கிறதே! பெருமைக்குரிய காரியம் என்றார்.

இந்தப் போட்டி, பந்தைக் கால்களால் மட்டும்; உதைத்து ஆடுகிற ஆட்டம். எதிரே இருக்கும் இலக்கிற்குள் பந்தை அடித்துவிடுகிற அணியானது, வெற்றி பெற்று விடும். அதற்காக, பல விதிமுறைகள் உண்டு. அந்தக் கட்டுப் பாட்டிற்குள் தான், ஆட்டத்தை ஆடி முடிக்க வேண்டும் என்று விளக்கம் கூறினேன்.

அந்த ஆட்டக்காரர்கள் ஒடுகிற திறன், ஓயாமல் களைக்காமல் ஆடுகிற ஆற்றல், அவர் களின் தேர்ச்சியை, திறமையைக் காட்டுகிறதே! கவனித்தீர்களா என்று, என்னைப் பார்த்துக் கேட்டார்.

ஆமாம் என்றேன்.

நம் நாட்டுக்காரர்களின் முகத்தில் அயர்வும், ஓட்டத்தில் தளர்வும் தெரிகிறதே கவனித்தீர்களா என்ற போது, அவரின் கண்ண்ோட்டத்தின் நுண்மையைக் கண்டு, அதிர்ந்து போனேன்!

படிக் காட்சியில், ஒரே சத்தம். பார்வையாளர் களில் பலர் எழுந்து நின்றும், சிலர் குதித்துக் கொண்டும் கூச்சல் போட்டு, கைதட்டி ஆரவாரிக்கிற சத்தம் கேட்டு உற்று நோக்கினோம்.