பக்கம்:வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

அவர் எந்த நேரத்தில் இப்படிப் பாடினாரோ, அது எல்லா காலத்துக்கும் நன்கு பொருந்துகின்ற பேருண்மையாகவே திகழ்கிறது.

திருக்குறளை தான் ஒரு நோக்கத்துடன் தொடர்ந்து படித்துக்கொண்டிருந்தால், அவர் எண்ணுகின்ற, எதிர்பார்க்கின்ற எல்லா கருத்துக் ‘களும் வெளிப்படும் என்று செங்கண்ணனார் செப்பிய உண்மையோ, உண்மையிலும் உண்மை.

வள்ளுவரது குறட்பாக்களை ஆராய்ந்து பார்த்த அறிஞர்கள் சிலர், தங்களது வட்டத்திற். குள்ளே அவரை வளைத்துப்போட முனைந்தனர். வாதாடினர். போராடினர். பொறுமையின்றி, புழுதிவாரி இறைத்துப் போனவரும் உண்டு.

வள்ளுவரை சிலர் ஜைன மதத்தினர் என்றனர். சிலர் வைணவர் என்றனர். வேறு சிலர் புத்த சமயத்தினர் என்றனர். இவர் சைவரன்றி வேறல்லர் என்று பலர் சாதித்தனர். இவர் கிறித் தவர் தான் என்று கேட்பாரும் மயங்கும்படி சிலர் கோடிட்டுக் காட்டினர்.

இப்படிப்பட்ட குறிப்புகளும், கருத்துக்களும், கூறியவர்களின் தவறில்லை. அவர்களது ஆராய்ச் சிக்கு, திருக்குறள் தந்த நுண்புலக் கருத்துக்கள் தான்.

கபிலர்பெருமான் கூறியதுபோல, புல்நுனியில் உள்ள சிறு நீர்த்துளியானது, பக்கத்திலே உள்ள