பக்கம்:வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள் 251.

காமக் கலன் என்பதற்கு விரும்பி ஏறுகின்ற மரக்கலம் என்று நீங்கள் உங்கள் காலத்து மரபில், பாடியிருக்கின்றீர்கள். எங்கள் காலத்தில், காமக் கலன் என்பது பெண்களின் தொடர்பு என்பு தாகவும் அமைந்திருக்கிறது என்றேன். 4.

எப்படி என்றார்.

இப்பொழுதெல்லாம் விளையாட்டு வீரர் களுக்குக் கொஞ்சம் பேரும் புகழும், பெருமையும் ஏற்பட்டு விட்டால்; உடனே குடிக்கும், கூத்திக்கும் அடிமையாகிப் போகின்றார்கள்.

இந்தக் காமக் கலனும், குடி வெறியும் சேர்ந்து கொண்டு, நீங்கள் கூறிய நெடு நீர், மறவி, LDL+ துயில் என்ற நான்கையும் கூட்டி வந்து விடுகின்றன. என்றேன்.

மதுவும் மங்கையும் மயக்கப் பிறந்தனவோ என்று திரும்பக் கூறிய வள்ளுவர், உண்மை தான் என்றார். இருமனப் பெண்டிர்கள், பொது மகளிர், பண்பின் மகளிர், மாய மகளிர், என்றெல்லாம் நானும் பாடியிருக்கிறேன்.

நீங்கள் கூறிய கருத்து பற்றியும் ஒரு குறளில் பாடியிருக்கிறேன்.

இருமனப் பெண்டிரும் கள்ளும் கவறும்

திரு நீக்கப் பட்டார் தொடர்பு (920)