பக்கம்:வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள் 253

முடிையவர்கள் விழ நேரிடுகிற போது, துவண்டு போகாமல், சோர்ந்து விடாமல், மேலும் மேலும் ஊக்கத்துடன் முயல வேண்டும். அப்பொழுது வெற்றி என்ற சுடர்முகம் பெற்றுத் திகழமுடியும்.

துன்பம் கண்டு சோராத உள்ளம், இன்பம் காணுமே தவிர, இன்னலுக்கு ஆட்படாது. அவர்களுக்கு வருகிற இன்னல்கள், இன்னல் பட்டு, பின்னங்கால் பிடரியில் படுவதுபோல, ஒடித் தொலையும். ஒதுங்கிமறையும். இந்த உண்மையை, விளையாட்டு வீரர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

அடுக்கி வரினும் அழிவிலான் உற்ற இடுக்கண் இடுக்கண் படும் (625)

வெற்றி சாதனைகளை விளைவிக்க வேண்டும் என்பவர்க்கு, முற்றும் சோதனைகளும், முடியாத வேதனைகளும் வந்து தான் தீரும். சேரும். அதனால் தான், அடுக்கி என்று ஒரு சொல்லை அதிலே சேர்த்தேன்.

எங்கள் தோல்விக்குரிய காரணங்களைத் தொகுத்துக் கூறியது போல், வெற்றி பெறும் வழி வகைகளையும் விளக்க வேண்டும். என்று வள்ளுவரைப் பார்த்துக் கேட்டேன்.

எனைத்திட்பம் எய்தியக் கண்ணும் வினைத்திட்பம் வேண்டாரை வேண்டாது உலகு. (670)