பக்கம்:வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/260

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

258 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

அதன் அ டி ப் ப ைட யி ல் தா ன் நான்,

விளையாட்டு என்பதைக் குறிக்க நகை என்ற

சொல்லோடு இரண்டு குறள்களைப் பாடியிருக் கின்றேன்.

நகையுள்ளும் இன்னாது இகழ்ச்சி பகையுள்ளும் பண்புள்ள பாடறிவார் மாட்டு (995)

நகைத்து விளையாடும் இடத்திலும், இகழ்ச்சி செய்தல் இன்னலைத்தரும். பகைவரிடத்திலும் நல்ல பண்புகள் உள்ளன என்பதையறிந்து. இகழ்ச்சி செய்யாதிருக்க வேண்டும் என்பது இதன் பொருள்.

பகைக்கும் நேரத்திலும் பண்பு காத்தல் பெருமை தரும். சிரித்து விளையாடுகிறபோதும், இகழ்வாகப் பேசுதல் சிறுமை தரும்.

பகை யென்னும் பண்பில் அதனை ஒருவன் நகையேயும் வேண்டற் பாற்றன்று (871)

பகை என்று சொல்லப்படுகிற தீயதனை,

ஒருவன் சிரித்துப் பொழுது போக்கும் விளையாட்

டின் இடத்து விரும்புதலாகாது என்பது இதன் பொருள்.

நகை என்ற சொல், மகிழ்ச்சியை, மறுமலர்ச் சியை, முகமலர்ச்சியை, சிரிக்கும் தன்மையை விளக்குகின்றன என்பதற்கு, நகை FF6&5 (மு கமலர்ச்சி) (953); நகையும் உவகையும் (304)