பக்கம்:வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள் 27

ஞானம் விரும்புவார்க்கு இது ஞான நூல்.

கவிச்சுவை விரும்புவார்க்கு இது காவியம்.

காமக்கலை விரும்புவார்க்கு இது காம நூல்.

பேரின்பம் விரும்புவார்க்கு இது பேரின்ப ஆழி.

வாழ்க்கைக்கு வழிகாட்டுகின்ற இது ஒரு mp

நூல்’

இப்படியெல்லாம் எழுதிச் சென்ற எங்கள் கவிஞர்களின் கருத்துக்களைப் படித்த பிறகு, எனக்குள் எழுந்த கேள்வி இது தான். என்னைப் போன்ற விளையாட்டை விரும்புவார்க்கு இது என்ன நூல் ? எங்கள் கேள்விகளுக்குரிய விடைகள் எங்கே இருக்கின்றன ?

வள்ளுவரின் புன்முறுவல் கீற்றோடியது. உங்கள் சிந்தனை சரிதான். விளையாட்டைப் பற்றி எதுவும் விளக்கமாக இல்லை என்பது தானே உங்கள் ஐயம். அவற்றை நான் வெளிப்படிை யாகக் கூறவில்லை என்பது உண்மைதான். ஆனால் தான் கூறாமல் விட வில்லையே ? என்றார் வள்ளுவர்.

எப்படி ? எப்படி? என்று என்னையறியாமல், என் குரல் மேலெழுந்த ஒலியில் வெளி வந்தது. வியப்பிலும் வியப்பான விடை அல்லவா அவர் தந்தது.

நீங்கள் விரும்புகிற விளையாட்டின் முக்கிய நோக்கம் என்ன என்று நான் தெரிந்து கொண் கூால், உங்கள் ஐயத்தைப் போக்கிவிட முடியும்."