பக்கம்:வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/297

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள் 295.

பெருகி வரும் நீர்ப் பெருக்குடன் பார்த்துக் கொண் டிருக்கும் போது, அந்த வெண்ணுருவம் புள்ளியாகி மறைந்து போனது.

யாரோ என்னைத் தொடுவது போல இருக்கவே. திடுக்கிட்டு விழித்துப் பார்த்தேன். என் மனைவி நின்று கொண்டிருந்தாள்.

எழுத உட்கார்ந்து விட்டு, இப்படி உறங்கிக் கொண்டிருக்கின்றீர்களே, என்று சிரித்தாள்.

வள்ளுவர் வந்தார். அவருடன் இத்தனை நேரமும் பேசிக் கொண்டிருந்தேன் என்று தயக்கம் கலந்த பெருமையுடன் பதிலளித்தேன்.

வள்ளுவரா ? இங்கே வந்தாரா? ஆச்சரிய மாகக் கேட்டாள்.

வள்ளுவரைப் பற்றி நினைத்துக் கொண்டே இருந்தேனா! அவர்தான் என் நினைவுலகில் வந்து என்னிடம் நிறைய சேதிகளைப் பற்றிப் பேசினார் என்று நான் பேசிக் கொண்டுட் இருந்ததைப் ‘சித்த அவளின் விழிகளில் ஆச்சரியமும் ஏளனமும் தெரிந்தது. -

புரிந்து கொண்டேன். இதைக் கூறினால் யார் தான் நம்பப் போகிறார்கள் ?

கான் குறட்பாக்களை படித்துப் படித்து புரிந்து கொண்டதைத் தான், இங்கே வள்ளுவர் தந்த விளையாட்டுச் சிந்தனைகளாகத் தந்திருக்கிறேன்.