பக்கம்:வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள் 29

ஈன்று புறந்தருதல் அன்னையின் கடன் சான்றோனாக்குதல் தந்தைக்குக் கடன். வேல் வடித்துத் தருதல் கொல்லர்க்குக் கடன். நன்னடை நல்குதல் வேந்தர்க்குக் கடன். இப்படி யாக சமுதாயத்தில் ஒவ்வொருவருக்கும் கடமை என்று இருந்தது. அதில் வீர வாழ்வுதான் விதந்து விளங்கிடும் பரிதியாகத் தெரிந்தது.

உங்களுக்குத்தான் ஆதிகால வாழ்க்கை வர லாறு தெரியுமே! அந்த வாழ்க்கையில், விளை யாட்டு எப்படி இருந்தது என்று எனக்குக் கொஞ்சம் விளக்குங்களேன். அதன் பிறகு, நான் என் கருத் தைக் கூறுகிறேன் என்று நிறுத்தினார் வள்ளுவர்.

நான் எனது ஆய்வை அவர்க்கு உரைக்க லானேன்.

“மக்கள் தாமே ஆறறிவுயிரே மாவும் மாக்களும் ஐயறிவினரே’

என்று சொல்கிறார் தொல்காப்பியர்.

ஆறறிவு உடையவர்கள் மக்கள். ஐந்தறி வுடையவர்கள் மாக்களும் மிருகங்களும் அறிவுத் தெளியாதவர்கள் மாக்கள்.

ஆதிகாலத்தில் மக்கள் என்பவர்கள், மாக் களாக மிருகங்களோடு மிருகங்களாக வாழ்ந்த போது, வாழ்க்கை என்பது போராட்டமாக