பக்கம்:வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள் 31

ஒரிடத்தில் ஒன்று சேர்ந்து தங்கியவர்கள், பல இனமாக பிரிந்து வாழத் தொடங்கினர். ஒவ்வொரு பிரிவிலும் ஒவ்வொரு தலைவன். அவன்வழி மக்கள். இப்படியே ஆங்காங்கே இடம் அமைத்து, எல்லை வகுத்துக் கொண்டு, கூட்டங் கூட்டமாக வாழத் தொடங்கிய மக்களுக்கு, விளையாட்டுப் பயிற்சிகள் வலிமைகளை வளர்த்துத் தந்தன. -

பாதுகாப்புக்காக ஒன்று சேர்ந்த மக்கள், மிகுந்த பத்திரமாக இருக்க, மற்ற கூட்டத்தில் உள்ளவர்களை ஆக்ரமிக்கத் தொடங்கினார்கள். அவர்கள் அடுத்தவர்களை அழிக்க முயன்றார்கள்.

தடுத்தவர்களைத் தாக்கினார்கள். தாக்கு வதற்காகப் புதுப்புது ஆயுதங்களை படைத் தார்கள். அவர்கள் அறிவுக்குக் கூர்மையான ஆயுதங்கள் கைகொடுத்தன. உடல் வல்லமையை வளர்த்துக்கொள்ள உழைப்பு உதவியது. ஆகவே, கூட்டத்துக்குக் கூட்டம் போர்கள். மக்கள் ஆண்மையாளர்களாக மாறினர். சாதாரண மக்கள் வீட்டில் இருந்தால் குடிமக்கள். போராயுதங்களைக் கையிலேந்தி விட்டால் வீரர்கள்.

கூட்டமாக இருந்த பிரிவு, விரிந்து கொண்டது. பரந்த எல்லையை அமைத்துக் கொண்டது. சாதாரண நிலையில் இருந்த ஒரு கூட்டத்தின் தலைவன், தெய்வத்திற்குரிய சிறந்த பெருமையைப் பெற்றுக்கொண்டான். அவன் வாழும் இடம்