பக்கம்:வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

அறிவு மட்டும் ஒருவருக்குப் போதாது. அறிவுடன் அடக்கமும், ஒழுக்கமும், பண்பு நலன், குணநலன் போன்ற அனைத்தும் ஒரு சேர இருக்க வேண்டும். அப்படிப்பட்ட மக்களையே சான்றோன் என்று சாற்றினேன்.

சான்றோனுக்கு மற்றொரு பெயர் என்ன தெரியுமா? தக்கார் என்பதாகும். அதற்கு முன் ஒரு குறிப்பைக் கூறுகிறேன்.

ஒரு நாட்டுக்குத் தேவை இன்னென்ன என்று ஒரு பட்டியலையே போட்டு, ஒரு குறளை எழுதி யிருந்தேன். அதை நீங்கள் ப்டித்திருப்பீர்கள் என்று எண்ணுகிறேன்.

பிணியின்மை செல்வம் விளைவு இன்பம் ஏமம் அணி யென்ப நாட்டிற்குஇவ் வைத்து. (138)

---

ஒரு நாட்டிற்கு அழகு பிணியில்லாத மக்கள், குறைவடையாத விளைச்சல், நிறைவான செல்வம்: மிகுந்து வருகிற இன்பம்; திகழ்ந்து வருகிற

பாதுகாப்பு.

காய்த்த மரத்தில்தான் கல்லெறி விழும் என்பார்களே! அதுபோல, ஒரு நாட்டின் ஒப்பற்ற சிறப்பைக் கண்டு, மற்றவர்கள் நாடி வருவதால் தான் அதற்கு நாடு என்று பெயர் வரலாயிற்று.