பக்கம்:வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள் 41

கிரேக்க நாட்டிலே, ஒவ்வொரு குடும்பத்தில் குழந்தை பிறந்ததும், அந்த நாட்டு அதிகாரிகள் தாம், முதலில் வீட்டுக்கு வருகை தருவார்கள். குறையுடலுடனோ அல்லது நோய் கொண்டோ குழந்தை பிறந்திருந்தால், அதைக் கொண்டு போய், மலை மீதில் வீசியெறியச் செய்து விடுவார்கள். அங்கே அந்தக் குழந்தை அழுதழுதுச் சாகும்.

நாட்டுக்கு நல்ல குடி மக்கள் தான் வேண்டும் என்ற இலட்சியத்தில், அவர்கள் மிகவும் குறியோடு இருந்தார்கள் என்றேன். அதனால் தான் ஒரு நாட்டுக்குத் தக்கார் வேண்டும் என்று பல முறை சுட்டிக் காட்டியிருக்கிறேன் என்றார் வள்ளுவர்.

இந்தக் குறளில், தக்காருக்குத் தகுந்த இடத் தையே அளித்திருக்கிறேன் பாருங்கள் என்று பாடிக் காட்டினார்.

தள்ளா விளையுளுங் தக்காரும் தாழ்விலார் செல்வரும் சேர்வதும் நாடு (731)

ஒரு நாட்டின் பெருமைக்குரியது வேளாண் மையும் விளைச்சலும். தக்க உடலும் மனமும் உள்ள தக்கார்கள் என்கிற குறையாத செல்வம் உடைய செல்வந்தர்கள். -

விளையும் செல்வமும், புரளும் செல்வமும், நாட்டுக்கு இரு கண்கள் போல. அவற்றை அனுபவிக்கும் அருமை தெரிந்தவர்களான தக்கார்கள் நாட்டுக்கு முகம் போல.

வள்ளுவ-3