பக்கம்:வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள் 43

தெரிந்து வாழாத உதவாக்கரை மக்களை, நீங்கள் செத்த பிணம் என்று கூடக் கூறியிருக்கிறீர்கள் என்று ஒரு குறளை நானும் பாடிக் காட்டினேன்.

ஒத்த தறிவான் உயிர் வாழ்வான் மற்றையான் செத்தாருள் வைக்கப் படும் (214)

வலிமையே வாழ்வு. பலஹீனம் பிணம் என்று கூறிய இந்நாளைய விவேகானந்தர் பற்றியும் அவ ரிடம் விரிவாகக் கூறினேன்.

நீங்கள் கூறிய முழு மனிதர் என்பதற்கும் நான் கூறிய தக்கார் என்பதற்கும் ஒற்றுமை இருக்கிற தல்லவா என்று கூறி சிரித்தார்,

ஆமாம் என்றேன் வியப்போடு

இந்த மக்களைப் பற்றிக் கூறிய என் கருத்துக் களை, இன்னும் கூறுகிறேன் என்றார். சரி என் றேன். அதுவே மனதுக்கு ஆறுதலாக இருந்தது.